Thursday, December 6, 2012

விஜய் ஒரு மொக்கை பையன்,20 வருட பார்வை



நடிகர் விஜய் திரையுலகுக்கு வந்து இருபது ஆண்டுகள் ஓடிவிட்டனவாம்..துப்பாக்கி படம் வந்து வசூலில் சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கும் இச்சமயம் அவருக்கு இருபது ஆண்டுகள் என்பது கூடுதல் இனிப்பு செய்தி..


கொஞ்சம் காலத்தை பின்னோக்கி நகர்த்திப் பார்த்தால்  தன தந்தையால் நாளைய தீர்ப்பு எனும் படத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அந்த இளைஞனிடம் பெரிய அழகோ,வசீகரமோ அன்றில்லை..ஒரு சாதாரண சராசரி பையனாகவே காட்சியளித்தான்..


அடுத்ததாக  விஜயகாந்தோடு  செந்தூரபாண்டியில் நடித்தபோது கொஞ்சம் கூடுதல் கவனம் பெற்றான்.அடுத்தடுத்ததாக இளமைத்துள்ளல் மிக்க நடிகைகளுடன் ஜோடி சேர்ந்ததில் நடிகைகளுக்காக படம் இளைஞர்கள் மத்தியில் ஒரு வசீகரத்தைப் பெற்றது..அப்போதும் விஜய் ஒரு சாதாரணன் தான்..பலர் விஜய்  ஒரு மொக்கை பையன் என்றே எள்ளிநகையாடினர்..

போகப்போக அந்த இளைஞனிடம் ரசிகனுக்கு பிடித்த சில சுவாரசியங்கள் இருப்பதாக தோன்றியது,முக்கியமாக தன பக்கத்துக்கு வீட்டு பையனைப் போல விஜயின் சாதாரண தோற்றம் கூட முக்கியத்துவம் பெற்றது எனலாம்..எளிமையானவர்கள் பலர் விஜயை தன்  உருவத்தில் பார்த்திருக்க கூடும்..
 

பின் காதல் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவர் நடிக்க ஆரம்பிக்க இளைஞர்களின் கவனம் அந்த நடிகனிடம் திரும்பியது..பூவே உனக்காகவில் தமிழ் ரசிகர்கள் பலரின் மனதில் இடம் பிடித்து பூத்துக் குலுங்கினான்.காதலுக்கு மரியாதை வந்தது சமூகத்தில் அந்த நடிகனுக்கான மரியாதையை இன்னும் அதிகமாக்கியது..



பின் அத்தோடு நிற்காமல் ஆக்சனில் இறங்கிய அந்த நடிகனுக்கு திருமலை திரும்பி பார்க்க வைத்து..பின் கில்லி சொல்லி அடித்தது..திருப்பாச்சி பொறி தெறிக்க ஓடியது..உயர்ந்த நட்சத்திர அந்தஸ்தை அவன் பெற்றான்..இளைய தளபதி இன்றைய சினிமாவின் முன்னிலை நடிகன் ஆனான்.

பின் நண்பன், துப்பாக்கி அடுத்த கட்டத்துக்கு அவனை உந்தி தள்ளி இருக்கிறது..அப்போ மொக்கை என்றவன் இப்போ விஜய் அழகு என்கிறான்..இருபது ஆண்டுகளில் சாதாரணன் சாதனையாளன்  ஆகி விட்டான்..


Widget byLabStrike


3 comments:

  1. Ena buildup kuduthaalum mokka mokka dhane..

    ReplyDelete
  2. Vijay in kanakatra tholvi padangalai vasadhiyaga maraitthu vittu 5 vetri padangalin pattiyal ittu ulleergal. Vijay in thiraivazhkaiyil tholvi padangal dhan adhigam

    ReplyDelete
    Replies
    1. tholvi padangal tharatha nadigargal endru oruvariyum solla mudiyathu....tholvi pADangal enbathu makkalin rasanai marumbothu mattum tha varugirathu...vijayin pudhu directors vaithu kondu pala vetri padangal kodutha hero enaku therinthu ivar mattum than....

      Delete