ரஜினி என்கிற சினிமா சகாப்தம் பிறந்து இன்றோடு 63 ஆண்டுகள்
ஆகிறது..வரலாற்றின் சிறப்பு மிக்க நாளான 12-12-12 என்கிற அரிய நாள்
அவருக்கு இன்று உரித்தாகி இருக்கிறது..நூறாண்டுக்கு ஒருமுறையே வரும்
பொன்னான நாளிது..
எத்தனையோ நடிகர்கள் தமிழ் சினிமாவில் வந்து போயிருந்தாலும்,ரஜினி என்கிற அந்த மகத்தான நடிகனுக்கு தமிழ் சினிமாவும்,தமிழ் மக்களும் தன் நெஞ்சங்களில் கொடுத்த இடம் இணையற்றது..
சாதாரண தோற்றத்தில் உள்ளே நுழைந்து பின் சினிமா சாம்ராஜ்யமாக மாறிய அந்த மனிதனின் தனித்துவம் மகத்தானது..இந்த சமயத்தில் ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டி இருக்கிறது..ரஜினி என்கிற நடிகன் தன் தனித்துவமான ஸ்டைல் என்கிற பாணியில்தான் மக்களின் மனதில் உயர்ந்த இடத்தைப் பெற்றாரா?இல்லை நடிப்பிலும் சேர்த்தா??
பெரும்பான்மையானோர் சொல்வது ரஜினிக்கு ஸ்டைல்தான் தனி அங்கீகாரத்தைப் பெற்று சூப்பர் ஸ்டார் ஆக்கியது மற்றபடி நடிப்பில் கமல்தான் சூப்பர் ..ரஜினி நடிப்பில் சுமார் ரகம்தான் என்பார்கள்..எனக்கு ஏனோ அதில் அப்போதிலிருந்தே உடன்பாடில்லை..
ரஜினி சூப்பர் ஸ்டார் ஆகுவதற்கு முன்பு சாதாரண நடிகனாக தோற்றமளித்த காலத்தை உற்றுநோக்கிநோமானால் அந்த நடிகனின் நடிப்பில் ஒரு உயிர்ப்பு இருக்கும்,மிகையில்லாத யதார்த்தம் வெளிப்படும்..மற்ற நடிகர்கள் சிரமப்பட்டு ஏன் கமலேக்கூட இதை செய்யமுடியுமா என்கிற மாதிரி நடிப்பை ரஜினி மிக அனாவாசியமாக செய்திருப்பார்..
ஆரம்பக்காலங்களில் ஸ்டைலை ஊறுகாயாக மட்டுமே
பயன்படுத்தி இருப்பார்..அவரின் நடிப்பே உயிர்ப்பு மிக்கதாய் தென்படும்..
அதனாலேயே படம் முழுக்க கதாநாயகனாக சிரமப்பட்டு கமல் நடித்தும் கூட, பல படங்களில் ரஜினி இரண்டு சீன் வந்தாலும் கைத் தட்டல்களையும்,பெயரையும் பெற்று வந்திருக்கிறார்..
கதாநாயகனாக கமல் பெயரோடு
இருந்த காலகட்டத்திலேயே ரஜினியோடு இணைந்து நடித்த படங்களில் எல்லாம்
அதிகம் பேசப்படுபவராய் ரஜினி மாறிப்போனார்..ரஜினியின் வேகமிக்க
இயல்பு , நடிப்புக்கு முன் கமலின் நடிப்பு பேசப்படவில்லை ..
ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து நடிக்க ஆரம்பிக்கவே ரஜினி தனக்கேயான தனித்துவமான ஸ்டைலை அதிகப்படுத்தி ரசிகர்களை மகிழ் விக்கலானார்..அதுவே மக்களிடத்தில் அதிகமாக பேசப்படவும்,பிரபலமாகவும் ஸ்டைல் அவருக்கு பலமானது..நடிப்பை விட ஸ்டைலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகனாக ரஜினி மாறிப்போனார்..
கமல் தனக்கேயான நடிப்பை மட்டுமே எடுத்துக்கொண்டு படத்துக்கு படம் வித்யாசம் காட்ட ஆரம்பித்தார்..ஆதலால் கமல் நடிப்பின் இலக்கணமாக பேசப்பட்டார்.ஆனால் கமலும் ரஜினியும் இணைந்து நடித்த காலக்கட்டத்தை எடுத்துப் பார்த்தோமானால் நான் அடித்து சொல்லுவேன் கமலை விட ரஜினியே சிறந்த நடிகர் ..
அந்த மகத்தான நடிகனுக்கு இந்த மகத்தான நாளில் என் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்..
இருக்கலாம்.. பதிவு சின்னதாய் முடிந்தது போல இருந்திச்சு.. ஹாப்பி பேர்த் டே ரஜினி..
ReplyDeleteHAPPY BIRTH DAY THALAIVAAAAAAAAAAAAAAAAAAAAa
ReplyDeleteuseless title. both are good actors. but for acting kamal is best.
ReplyDeletesema comedy ,kamal ji good actot he is legend. rajani ji nalla manithan . thanipadda kunathil rajani best nadikan endaa always kamal thaan
ReplyDelete