Friday, December 14, 2012
யாருக்கும் தெரியாத அந்தரங்கம்
யாருக்கும் தெரிந்திருக்காது...
என் அந்தரங்கம் இவ்வளவு
அசிங்கமானதென்று !
என் அகவெளி இவ்வளவு
அருவருப்பு நிறைந்த தென்று !
நாணும் சொற்களை
நான் நாணாமல் பேசுவேனென்று !
நாகரிகமாய் கீழ்த்தரம் என்பீர்களே,அதில்நான்
நாகரிகமில்லாமல் கிளர்ச்சி அடைவேனென்று !
உணர்வை பின்னுக்குத் தள்ளிவிட்டு
உணர்ச்சிக்கு முன்னுரிமை தருவேனென்று !
யாருக்கும் தெரிந்திருக்காது
என்றிருந்தேன் ...
அனைவர் வீட்டு அடைபட்ட சுவரும்
அறிந்து வைத்திருக்கிறது
ஆயிரம் அந்தரங்கங்களை!
Widget byLabStrike
Subscribe to:
Post Comments (Atom)
ஆகா சுவருக்கும் பார்வை உண்டோ கலக்கல் கற்பனை
ReplyDeleteநன்றி நண்பரே..மீண்டும் வருக
Deleteஅன்பின் படைப்பாளி - வலைச்சரம் மூலமாக வந்தேன் -கவிதை அருமை - அனைவர் வீட்டு அடைபட்ட சுவரும்
ReplyDeleteஅறிந்து வைத்திருக்கிறது
ஆயிரம் அந்தரங்கங்களை! - உண்மை உண்மை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
மிக்க நன்றி..மீண்டும் வருக..
Delete