Tuesday, September 10, 2013

காமம் அறுவடை



காமம் மட்டும்
முதலாய் கொண்டு
காதலின்  பெயரில்
அறுவடை செய்யும்
காடையர் சூழ் வீணர் கூட்டம்!

ஓடுகின்ற  பேருந்திலே
ஒரு பெண்ணை சீரழிக்க
கூடிய  கூட்டமிங்கு
கேடுகெட்ட மிருகக்கூட்டம்!

குழந்தை எனும் பாராது
பலாத்காரம் செய்கின்ற
பைத்தியங்கள் நிறைந்த
பீத்தின்னும் நாய்கள் கூட்டம்!

மென்மையான காமத்தினை
வன்மையாக கையாண்டு
வன்புணர்வு செய்கின்ற
மிருகமிஞ்சிய சைக்கோ கூட்டம்!

சாதி கொண்டு
மோதி கொன்று
சாக்கடை மனங்கள் மட்டும்
சாகாக்கூட்டம்!

வாரம் நூறு பலி
வேண்டும்.. 


அதில் 
இந்த வகையறாக்களை  எல்லாம்
பலியிட வேண்டும்!


Widget byLabStrike


3 comments:

  1. உங்கள் கோபம் நியாம் தான்

    ReplyDelete
  2. பீத்தின்னும் நாய்கள் தான்...

    ReplyDelete