Monday, December 24, 2012

சச்சினால் நான் முட்டாள் ஆனேன்


எனது சிறுவயது பருவமது..பள்ளியில் துள்ளி விளையாடிக்கொண்டிருக்கிறேன்..பள்ளிக்கு கட் அடிப்பது எப்படி என்று கற்றுக் கொண்டிருந்த சமயம்..கட் அடிப்பதற்கான காரணம் அதுதான்.படம் பார்ப்பதற்கில்லை..பாடம் படிப்பதற்கு..ஆமாம் வெள்ளைக்காரன் நம் ஊரானுக்கு கற்றுக்கொடுத்து விட்டுப் போன பாடம் கிரிக்கெட்தான் அது.

எனக்கு அதில் அவ்வளவு மோகம் கிடையாது.ஆனால் நண்பர்கள் கேட்ச்,விக்கெட்,ஸ்பின்,எல் பி டபல்வியூ,பாஸ்ட் பால்,ஸ்லொவ் பால் என புரியாத பாஷைகளில்  பேசக் கேட்டு எனக்கு ஏதோ ஓர் ஈர்ப்பு தொற்றிக்கொண்ட சமயம்.என் வீட்டில் அப்போ தொலைகாட்சி இல்லை..ஊரில் ஒரு சில செல்வந்தர்கள் வீட்டில் மட்டுமே இருக்கும்..கிரிக்கெட் பற்றிய செய்திகளை தினசரிகளில் நிகழ்படமாக பார்த்து படித்து என் ஆசையை பூர்த்தி செய்து கொள்வேன்..

அப்போதான் தினசரிகளில் தவறாமல் அந்த பதின்ம வயது இளைஞனை படம் போட்டு காட்டிகொண்டிருந்தார்கள்.தினசரி பட்டையை கிளப்பும் அந்த இளைஞனுக்கு அந்த தினசரி கொடுத்த பட்டம் கூட இன்னும் ஞாபகம் இருக்கிறது."இந்திய இளம் புயல்" .

அவர் வந்து நின்றாலே பந்து மைதானத்தை விட்டு பறக்க ஆரம்பித்தது.அந்த பட்டத்துக்கு சொந்தமான அவர் வேறு யாருமல்ல நம் இந்திய மண்ணின் சாதனை நாயகன் சச்சின்தான் .வினோத் காம்ப்ளியோடு ஜோடி சேர்ந்து அவர்கள் கலக்கும் கதையை கேட்டு பள்ளியை கட் அடித்து கிரிக்கெட் பார்க்க கற்றுக்கொண்டிருந்தேன்.

அந்த மனிதன் மீது வந்த ஈர்ப்புதான் கொஞ்சம் கிரிக்கெட் மீது எனக்கு மதிப்பு வருவதற்கு காரணமானது.அதுவரை நான் கிரிக்கெட் மீது  வைத்திருந்த நம்பிக்கை இதுதான்.."பதினொரு முட்டாள்கள் விளையாடும் விளையாட்டை 11 லட்சம் முட்டாள்கள் ரசிக்கிறார்கள்" என்பேன்..ஆனால் தற்போது பல கோடி முட்டாள்களில் நானும் அவ்வபோது ஒருவனானேன்..காரணம் சச்சின் என்கிற சகலகலா வல்லவன்தான்..

100 செஞ்சுரிகளை அசால்ட்டாய் அள்ளி போட்டுக்கொண்டு,ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் என்கிற இமாலய  சாதனை நிகழ்த்தி விட்டு,உலகிலேயே அதிக ரன்கள் இன்னும் பல பல சாதனைகளுக்கு சொந்தக்காரன் ஆகியும்  இறுமாப்பு இல்லாமல் அவர் இருப்பதை பார்க்கும் போது கிரிக்கெட்டுக்காக இல்லாவிடினும் அந்த மனிதனின் எளிமையான இயல்புக்காகவேனும் நான் அவர் ரசிகனாய் மாறிப் போயிருந்தேன்.

அந்த மனிதன் சமீபகாலமாக சரியாக விளையாடவில்லை என சர்ச்சைகள் கிளம்பினாலும்,அவர் நிகழ்த்திய சாதனைகள் அவரை வெறுக்க வைக்காமல் எதிர்ப்பார்க்கவே வைத்திருந்தது..அடுத்து சாதிப்பார் அடுத்த போட்டியை வெல்வார் என்றே எண்ண  வைத்துக்கொண்டிருந்தன..
ஆனால் அவர் ஒருநாள் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறப்போவதாக திடீரென அறிவித்திருக்கிறார்..

அது உலக கிரிக்கெட்,சச்சின் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும், அடுத்து வரும் இளைய சமுதாயத்துக்கு அவர் வழி விட்டதாக எண்ணி ஏற்றுக்கொள்ள வேண்டியதாகி இருக்கிறது..

என்ன இருந்தாலும் இன்னொரு சச்சின் கிடைக்க நமக்கு இன்னொரு யுகம் ஆகலாம்..இல்லை கிடைக்காமலும் போகலாம்..வரலாற்றின் ஏடுகள் என்றும் சச்சினை வாழ்த்திக்கொண்டே இருக்கும்.. சச்சின்  சச்சின்தான்..


Widget byLabStrike


2 comments:

  1. நண்பா,

    அருமை ! ! சச்சின் இன்னுமொரு 100 அடித்துவிட்டு ஒரு கெத்தா ஒய்வு பெற்றிருக்கலாமோ??? நானும்கூட கிரிக்கெட் சச்சினால் சச்சினுக்காக மட்டுமே பார்க்க ஆரம்பித்தேன்... பக்கத்துவீட்டு பொடியன் பெயர்கூட பாலாஜி.....

    ReplyDelete
  2. சச்சின் கிரிகட் விளயாட்டு வீரர் அல்ல எங்கள் கிரிகட்டே அவர்தானுக அவுறுகாகா தான் நாங்க கிரிகட்டே பாத்தோம்

    ReplyDelete