Sunday, December 30, 2012
மூப்பாகி தோல் சுருங்கியபோதும்
கடலின் அடி சென்று
எடுக்கும்
முத்தைப் போன்று
பூவிதழில் கொஞ்சம் கொஞ்சமாய்
சேமிக்கும்
தேனைப்போன்று
குழந்தையின் முதல் பேச்சை
ரசிக்கும்
தாயைப்போன்று
மனைவி கருவுற்ற செய்தியை
முதன் முதலாய் கேட்ட
கணவனைப்போன்று
முதல் முத்தம்
அனுபவித்தவனின்
பரவசம் போன்று
வயதாகி தோல் சுருங்கியபோதும்
காதலிகளின்
அழகு மட்டும் மங்குவதேயில்லை!
Widget byLabStrike
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment