Friday, September 6, 2013

அழுக்கு என் தேகமெங்கும்


என் மனதில்
நீர்த்து நிரம்பும்
அழுக்கு  குப்பைகள்
என்னை நிர்வாணமாக்கி விடுகின்றன!
அப்போதெல்லாம்
அழுக்கு  தோய்ந்த தேகத்துடன்
நீயும் அருகாமை வருகிறாய்
தொடுகிறாய்
தீண்டுகிறாய்
சேற்றினை அள்ளி என் தேகம் எங்கும்
தேய்க்கிறாய்!
மாறி மாறி இறைக்கிறோம்
ஒருவர் மீது ஒருவர் சேற்றை
யாரும் அறியாத மண்வாசனை
உனக்கும் எனக்கும்
மட்டுமானதாய் இருக்கிறது!
அழுக்கான அத்தருணத்தில்
மனது சுத்தமாகிறது
நாம் புனிதமாகிறோம்!


Widget byLabStrike


1 comment: