Tuesday, January 1, 2013

இல்லாதார் இல்லை என்றாகட்டும்



மதவெறி கொண்ட மனம் மாறட்டும்
இனவெறி கொண்ட மனம்  இல்லாதாகட்டும்
சாதிவெறி கொண்ட மனம்  சாகட்டும்
நிறவெறி கொண்ட குணம் நீர்த்து போகட்டும் 

சமுதாய சாக்கடைகள் நறுமணம் வீசட்டும்
வறுமையும் வெறுமையும் இல்லாதொழியட்டும்
பசுமையும் பாதுகாப்பும் மென்மேலும்  வளரட்டும்
அன்பும்  காதலும் தழைத்து  ஓங்கட்டும்

சாராயக்கடைகள் இல்லாத சர்வதேசம் பூக்கட்டும்
மரங்களை வளர்க்கின்ற மனங்கள்  செழிக்கட்டும்
நதிகளும் நீர்வரத்தும் அனைவர்க்கும்  பொதுவாகட்டும்
எல்லைகள்  பிரிக்காத பரந்த மனம் மலரட்டும்

நோய் நொடி இல்லாத சமூகம் தழையட்டும்
படிப்பும் மருத்துவமும் இலவசமாகட்டும்
அணுவும்,ஆயுதமும் இல்லை என்ற  நிலை வரட்டும்
இல்லாதார் இல்லை என்றாகட்டும் உலகு!

அனைவர்க்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Widget byLabStrike


6 comments:


  1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    ReplyDelete
  2. இந்த கவிதைக்கும் மேலே இணைத்துள்ள படத்துக்கும் என்ன சம்பந்தமோ ?

    புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. கருப்பினப் பெண்ணும் வெள்ளைக்காரக் குழந்தையும்..இந்தப் படம் நிற ஒற்றுமையை உணர்த்துகிறது நண்பரே..நன்றி

      Delete
  3. இப்புத்தாண்டில் உங்களது எண்ணங்கள் ஈடேரட்டும் ...
    வாழ்த்துக்கள் அண்ணா!

    ReplyDelete