Saturday, January 19, 2013

பவர் இல்லாட்டி பவர்கட்டு..பவரால ஆகிடுச்சி செம ஹிட்டு..



ரொம்ப நாளா பதிவு எழுதலையே எழுதும்போது எதாவது பவர்புல்லான பதிவா எழுதிடணும்னு ப்ளானோட இருந்தேன்..நல்லவேள நம்ம பவர் ஸ்டார் படம்  வந்துடுச்சி..ஹீ.ஹீ..

முன் குறிப்பு: இது படத்தை பத்திய பதிவு இல்லீங்க .. நம்ம பவரை பத்திய பதிவு மட்டுமே..

நான் எந்த படத்துக்கும் இம்புட்டு ஆர்வமா கிளம்புனது  இல்லீங்க, சூப்பர் ஸ்டார்  படத்தை தவிர.. லட்டு தின்ன ஆசையா வரப்போகுதுன்னு சொன்ன உடனே முடிவு பண்ணிட்டேன் முதல் நாள் படம் பாக்கனும்னு.. பொங்கல் லீவுக்கு ஊருல இருந்த காரணத்தால எங்க சொந்த ஊரு மக்களோட படத்த பாக்குற பாக்கியம்.. பவரு திரையுல தோன்றுன உடனே பட்டையை கிளப்புற கைத்தட்டல், விசில் சத்தம் பயபுள்ளைங்க பவர் மேல எவ்வளவு  பைத்தியமா திரியுதுங்க..

சரி ஆரம்பம்தான்  அப்பிடின்னு பாத்தா அவர் வர அனைத்துக் காட்சியும் பட்டாசு கிளப்பிடுச்சிங்க.. ஒரு மனுஷன் காமெடி பண்றதுக்கு முன்னாடியே சிரிக்க வைக்க முடியுதுன்னா அவர் எவ்வளவு பெரிய ஆளா  இருக்க முடியும். இந்த நூற்றாண்டோட மிக முக்கியமான ஆளுங்க இந்த பவர் ஸ்டாரு.. தன்னம்பிக்கையும், யாரிடமும் இல்லாத  புன்முகமும், எவ்ளோ அடிச்சாலும் தாங்குற மன வலிமையும் இந்த மனிதனின் மாபெரும் தனித்தன்மைகள்..

படத்த பாத்துட்டு ஆபிஸ் வந்தா ரெண்டுநாளா ஆபிஸ் முழுக்க பவர் பேச்சுதான்.. கண்ணா பொங்கலுக்கு எல்லோருமே லட்டு சாப்பிட்டுட்டு வந்திருக்காங்க.. சாப்பிட்டவங்க எல்லோருமே சொன்னது பவர் லட்டுதான் பக்கா  டேஸ்ட்டுன்னு.. இவ்ளோ நாளா பவர் சொன்ன காமெடி டையலாக் இப்போ உண்மை ஆகிடுச்சிங்க..50 லட்சம் ரசிகர்கள் இப்போ அவருக்கு உண்மையிலேயே கிடச்சுடாங்க.

படத்துல பவரை கலாய்க்கிறதா நெனச்சி சந்தானம் பேசினாலும் மொக்க வாங்கிருக்கது பவரு இல்ல சந்தானம்தான்..தம்பி இவ்ளோநாளா ஒன் மேன் ஆர்மியா சீன போட்டாப்ல.. இனி சந்தனத்துக்கு வர சான்ஸ் நம்ம பவருக்கு போறது நிச்சியம்.. அடக்கம் அமரருள் உய்க்கும்..

BP இருக்கவன், ரத்தக் கொதிப்பு பிடிச்சவன், சிரிக்க காசு கேக்குறவன் எல்லோரும் லைன்ல நில்லுங்கடா .. இனி உங்க நோயைப் போக்க ஆஸ்பத்திரி போக வேணாம்.. எங்க அண்ணன் இருக்காரு வாங்கடா.. பவரு ஒரு நோய்நீக்கும் மருந்து.. தலீவா நீ வாழ்க..

பின்குறிப்பு: ஒரு லைன்ல படத்த பத்தி சொல்லனும்னா..

பவர் நீக்கிட்டு படத்த பாத்தா பவர்கட்டு.. பவர் இருக்கதால படம் ஆகிடுச்சி  (ப்ரைட்டு) செம ஹிட்டு..


Widget byLabStrike


No comments:

Post a Comment