Friday, January 25, 2013

மடிந்து போகட்டும்


சாதிகள் ஒழியட்டும்
சரித்திரம் பேசட்டும்

நிறங்கள் நீர்க்கட்டும்
நீதிகள் வளரட்டும்

மதங்கள் சாகட்டும்
மானுடம் வாழட்டும்

இனவெறி இல்லாதாகட்டும்
இன்பம் கூடட்டும்

வயிற்றுப்பசி தீரட்டும்
பகுத்தறிவுப்பசி எடுக்கட்டும்

ஆயுதங்கள்  அழியட்டும்
அன்பு ஓங்கட்டும்

காதல் பூக்கட்டும்
காடையர்கள் கருகட்டும் 


எல்லைகள் களையட்டும்
எல்லோரும் ஒன்றாகட்டும்!



Widget byLabStrike


No comments:

Post a Comment