Friday, February 1, 2013

கமலை திட்டும் உரிமை எனக்கிருக்கிறது

 
விஸ்வரூபம் விசயத்தில் முஸ்லிம்களுக்கு  ஆதரவாய் கமலுக்கு எதிராய் நின்று நான் எதிர்வினை ஆற்றுகிறேன் என்று என்னிடம் முகநூளிலும் ,என் ப்ளாக் பக்கத்திலும் சில நண்பர்கள் குற்றசாட்டுகளை வைக்கிறார்கள்...என் ப்ளாகில் நான் கமலைப் பற்றி எப்போதும் எதிர் கருத்தே  கூறி வருகிறேன்  என்றும் நான் வேறொரு நடிகரின் ரசிகன் என்றும் என்னிடத்தில் கருத்து சொல்கிறார்கள்.அந்த அன்பர்களுக்கு நான் ஒரு விசயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.கமலின் மீது எனக்கு வெறுப்புணர்ச்சி கிடையாது..நல்ல கலைஞனாய் நான் கமலை மனதார மதிப்பவன்.

இந்த ஓவியம் நான் கமலின் மீதுள்ள உணர்வில் என் கல்லூரி காலத்தில்(2000) வரைந்தது..கமலைத் தவிர என் வீட்டில் வேறு நடிகர்களின் ஓவியம் கிடையாது.காரணம் ஒரு கலைஞனாய் நான் இன்னொரு தலையாய கலைஞனுக்கு என் மனதில் கொடுக்கும்  மரியாதை..

ஒரு கலைஞன் மீதுள்ள அபிமானத்தில் நான் ஓவியம் தீட்டும் போது,அவரின் மீது எதிர்வினை ஆற்றவும் எனக்கு உரிமை இருக்கிறது.
நடிகர்கள் தவறு செய்யும்போது எதிர்த்துப் பேசவும்,நல்லது செய்யும்போது பாராட்டவும் என்னிடத்தில் மனம் இருக்கிறது.

முதலில் முஸ்லிம் நண்பர்களுக்கு எதிராக விஸ்வரூபத்தில் கருத்திருக்கிறது என்று சொல்லப்பட்டபோது ஒரு மனிதநேயத்தோடு  கமலை எதிர்த்தேன்..இப்போ கமல் என்கிற தனி நபர் மீது அரசு வன்முறை,காழ்ப்புணர்ச்சிக்காட்ட   இந்த விசயத்தைப் பயன்படுத்துகிறது என்கிற போது கமலை ஆதரிக்கிறேன்..

என் மனதில் தவறென பட்டால் கமலைத் திட்டுவேன்..பாசம் வந்துவிட்டால் அள்ளி அணைக்கவும் செய்வேன்.ஒரு நடிகன்  என்ன செய்தாலும் விமர்சனம்
செய்யாமல் ஆதரவு காட்டுபவன்  வெறும் ரசிகனாக இருக்க முடியும்..விமர்சனம் செய்பவன் எதிரி என்றில்லை நண்பன் அல்லது நடுநிலையாளனாகவும் இருக்கலாம் என்பதையும் உணருங்கள்.


Widget byLabStrike


1 comment:

  1. புரிந்து கொள்வதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம்... குழப்பம் இல்லாமல் இருந்தால் போதும்... எதை பற்றியும் கவலைப்படத் தேவையில்லை... (நான் சொல்வது நம் மனதில் எழும் கருத்துக்களை...)

    நன்றி தோழரே...

    ReplyDelete