Thursday, February 14, 2013

காதலுக்கு ஒரு எச்சரிக்கை



காதலிப்போம் வா..
சாதியற்ற மானுடத்தை
மதமற்ற மனிதனை
இனவெறியற்ற இதயத்தை
எல்லை  கடந்த தேசத்தை!

ஒருத்தி பின்னால் செல்
ஒருதலைக் காதல் செய்
இருதலை காதலாக்கு
இல்லை உன் தோழியாக்கு
இன்னொருத்தி பின்னால் போ
அவளை உன் காதலியாக்கு!
 
கத்திகுத்து வேண்டாம்
காதலை கொல்லாதே
ஆசிட் வீச்சு வேண்டாம்
காதலின் புனிதம் அழிக்காதே
தற்கொலை வேண்டாம்
காதலை புதைக்காதே!


காற்றுப்  புகா இடத்திலும்
காதலிருக்கிறது
காதலிருப்பதாலையே காற்றுப்புகவும்
இடமிருக்கிறது!

இதயத்தில் காதல் சுமந்தவன்
இறுமாப்பு கொள்வதில்லை
தோளிலே சாதி சுமந்தவன்
மனிதனாய் வாழ்வதில்லை!

கடவுள் இல்லை என்பவன்
காதலை கொன்றதில்லை
கடவுளை பிடித்தவனுக்கு
காதல் பிடித்ததில்லை!

காதலை எதிர்க்கிறவன்
மதத்தை காதலிக்கிறான்
சாதியை காதலிக்கிறான்
பிற்போக்குத்தனத்தை காதலிக்கிறான்!

ஏ காதலே..
உனக்கு ராவணன் களும் ,ராமன்களும்
எதிரியில்லை
ராமதாசன்களிடம் எச்சரிக்கையாய் இரு!


காதல் செய்யும் நல் உள்ளங்களுக்கு என் காதலர் தின வாழ்த்துகள் !


Widget byLabStrike


6 comments:

  1. வரிகள் அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இளமையில் வந்த காதல் இறக்கும் வரை மறைவதில்லை!அதுவே உண்மைக்காதல்!
    நன்று

    ReplyDelete
  3. தங்களது வலைப்பதிவு பற்றி இன்றைய வலைச்சரம் (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_10.html) வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். காண்க.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அய்யா..கண்டேன் களிப்புற்றேன்..

      Delete