Wednesday, March 13, 2013

ஏன் பரதேசி படத்தை புறக்கணிக்க வேண்டும் ?



ப்ளாக் எழுதி கிட்ட தட்ட ஒரு மாத காலமாகி விட்டது.இவ்வளவு பெரிய இடைவெளியை இதற்கு முன் நான் எடுத்ததில்லை.வேலை காரணமாகவும் ஓவியம் வரைவதில்  மூழ்கிவிட்ட வேறு காரணமாகவும் இடைவெளி ஆகிவிட்டது .



இன்று எக்காரணம் கொண்டும் எழுதிவிட வேண்டுமென்கிற ஆவலோடுதான் இருந்தேன்.எதேச்சையாக முகநூல் பக்கம் போய்  பார்த்தால் பட்டாசு கிளப்புற பரப்பரப்போடு பற்றிக் கொண்டிருக்கிறது பரதேசி ட்ரைலர் விவகாரம்..சைக்கோ பாலாவின் பரதேசியை  புறக்கணிக்க வேண்டும் என்கிற வாஞ்சையான வார்த்தைகளோடு வசை பாடி இருக்கின்றனர் பலரும்.

அப்படி என்னதான் அவர் சைக்கோத்தனமாக நடந்துகொண்டு விட்டார் என்று பலமுறை ட்ரைலரை போட்டுப் பார்த்தும் நான் கண்டுகொண்டது ஒன்றுதான்.சைக்கோ அவ்வளவு வெறித்தனமாக நடிகர்களிடம் நடந்து கொண்டிருக்க கூடாது.தான் ஒரு இயக்குனர் என்பதால் முதலாளித்துவத்தை,ஆதிக்கத்தை,ஆணவத்தை,அராஜகத்தை  மற்ற நடிகர்களிடம் காண்பித்திருக்க கூடாது.அடிப்பதற்கு பாலா யார்?அடிமை வர்க்கத்தின் எஜமானனா??

நடிப்பது நடிகனின் வேலை ..நடித்துக் காண்பிப்பது அல்லது அவர்களிடம் வேலை வாங்குவது  இயக்குநனின் வேலை..அடிப்பது அடியாள் வேலை..இங்கே ஏன் பாலா அடியாளாக ,எஜமானனாக ,ஆதிக்கவர்க்கமாக நடந்து கொள்ள வேண்டுமென்றுதான் எல்லோரையும் போலவே முதலில் பார்த்தபோது நினைத்து விட்டேன்.
ஆனால் நான் முடிவில் புரிந்துகொண்டது வேறு,உள்ளார்ந்து உணர்ந்தது வேறு.

பாலா அடிப்பது உண்மையான பிரம்பு என்று எண்ணி விடாதீர்கள்,அது நடிப்புக்காக உபயோகப்படுத்தப்படும் டம்மி பிரம்பு.படத்தில் இடம்பெறும் காட்சியைத் தான் அவர் நடிதுக்காட்டுகிறாரே தவிர,அவர் நடிக்கத் தெரியவில்லை என்பதற்காக நடிகர்களை அடிக்கிறார் என்று பலரும் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.பாலா அடிப்பது போன்று சித்தரிக்கப்பட்ட காட்சி பின் ஒரு நடிகர் அடிப்பதாக படமாக்கப் பட்டுள்ளதும் அந்த ட்ரைலரில் இணைக்கப்பட்டுள்ளது.மேலும் உதைப்பது காட்சியின் எதார்த்தத்தை விளக்குவதாகவே உள்ளது.

மேலும் மற்ற இயக்குனர்களைக் காட்டிலும் நல்ல யதார்த்த சினிமா எடுக்கும்  முயற்சியில் ஈடுபடுபவர் பாலா.எனவே ஒரு ட்ரைலரை பார்த்த மாத்திரத்தில் அதன் உண்மை நிலை என்னவென்று தெரியாமல் பலரும் பலவாறு விமர்சித்து படத்தை புறக்கணிக்க வேண்டுமென்று சொல்வது தவறு.உண்மை என்னவென்று தெரியாமல் இது போன்ற தவறான செய்தி பரப்பப்படும்போது,அது பலரையும் சென்றடைந்து  ஒரு நல்ல படைப்பாளியின் நல்ல படைப்பு வீணாவதற்கும் வாய்ப்பிருக்கிறது.


Widget byLabStrike


6 comments:

  1. //பாலா அடிப்பது உண்மையான பிரம்பு என்று எண்ணி விடாதீர்கள்,அது நடிப்புக்காக உபயோகப்படுத்தப்படும் டம்மி பிரம்பு.படத்தில் இடம்பெறும் காட்சியைத் தான் அவர் நடிதுக்காட்டுகிறாரே தவிர,அவர் நடிக்கத் தெரியவில்லை என்பதற்காக நடிகர்களை அடிக்கிறார் என்று பலரும் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.//
    உண்மைதான் .. விளம்பரத்திற்காக பண்ணினது விவகாரத்திற்கு வழிவகுத்துவிட்டது ....

    ReplyDelete
    Replies
    1. அதுவும் ஒருவகை விளம்பரம்தான் நண்பரே..

      Delete
  2. நிழலைப் பார்த்து பயப்படும் கூட்டம் நிறைய இருக்கிறது... என்ன வேண்டுமானலும் சொல்வார்கள்...

    ReplyDelete
  3. நாட்ல டீசரை புரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு கைபுள்ளைங்க அதிகமாயிட்டானுங்க.
    அதுல ஒன்னு படம் வேற டைரகட் பண்ண போறேன்னு பயமுறுத்துங்க.

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹ ஹ... அழகாக சொன்நீர்கள் ஒதிகை மு.க.அழகிரிவேல்

      Delete