Friday, March 15, 2013

அர்த்தம் சொல்லும் அற்புதம் "காமம் "



ஒற்றை வார்த்தையில்
ஓராயிரம் அர்த்தம் சொல்லும்
கவிபுனைய உவகை கொண்டேன்.

நினைத்த மாத்திரத்தில்
நெஞ்சம் சொன்னது
"அம்மா" முதல் கவிதை.

அவளிடத்தில் ஆரம்பமாகிறது
என் அடுத்த கவிதை
"அன்பு'

உலகம் உயிர்த்திருக்கும்
ஒற்றை சொல்
மூன்றாம் கவிதையாய் "காதல்"


வாழ்தலுக்கான
அர்த்தம் சொல்லும் அற்புதம்
"காமம் "

காமத்திலிருந்து ஆரம்பமாகிறது
இவ்வுலகவும் இயங்குதலுக்கான
"பிறப்பு"

இவையெல்லாம் சேர்ந்ததாலே
இன்னுமிருக்கிறது இயற்கையில்
"உயிர்ப்பு "


Widget byLabStrike


1 comment: