Saturday, March 16, 2013

"பரதேசி" பாராளும் தேசி






பல நாட்களாக ட்ரைலர் ஏறப்படுத்தியிருந்த பிரமிப்பிலும் ,சில நாட்களாக டீசர் உருவாக்கியிருந்த சர்ச்சையிலும் படத்தின் மீதான காதல் எனக்கு அதிகமாகத்தான் இருந்தது.

பரதேசியை பார்க்க பரபரப்பாய்  போனேன் ..பரதேசி பார்த்த பாதிப்பும் பாலா ஏற்படுத்திய தாக்கமும் எனக்குள் இன்னும் ..இளையராஜா என்கிற இசையரசன் மட்டும் இக்காவித்தில் இணைந்திருந்தால் இது இதிகாசம் ஆகி இருக்கும்.

பரதேசி..விமர்சனம் என்று சுருக்கி எழுத முடியாத வாழ்வியல் வரலாறு..வலி,வேதனை,ரணம்,காதல்,காமம் என கரைபுரண்ட காவியத்தை, உருவாக்கியவனை ஓவியமாக்கி மகிழ்வதை தவிர எழுத்தாக்க இயலவில்லை என்னால் ..வாழ்த்துகள் பாலா ..


Widget byLabStrike


3 comments:

  1. அற்புதம்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இந்த படத்தை இன்னமும் பார்க்கவில்லை, ஆனால் பரதேசி என்ற தலைப்பும், கதைக் கருவும், கண்காணிகளின் அராஜகங்களும், வெள்ளை முதலாளிகளின் சுரண்டல்களும் முன்னோட்டத்தில் பார்க்கும் போது, எனக்கு சட்டென நியாபகம் வந்தது, 150 ஆண்டுகளுக்கு முன்னால் வறுமையில் வாடிய தலித்களை ஏமாற்றி பொடி நடையாகவே இலங்கையின் மத்திய மாகாணத்துக்கு கொண்டு போய், போற வழியில் லட்சக்கணக்கானோர் இறந்து மடிய, மிச்சம் மீதி இருப்பவர்களை ஒரு கொத்தடிமைகளாக மாற்றி இன்றளவும் சீரழிந்து கிடக்கும் மலையகத் தமிழர்கள் தான். அதுவும் மலையகத்தில் கண்காணிகளாக இருந்தவர்கள் பெரும்பாலும் யாழ்பாணத் தமிழர்கள், அவர்களின் கொடுமைகளை, சாதி வெறிகளை பல்வேறு மலையக இலக்கியங்கள் சித்தரித்துள்ளன. அத்தோடு இலங்கை விடுதலை அடைந்த போது, அவர்கள் குறித்து சிறிதும் கவலைப்படாது நடுத்தெருவில் விட்டுச் சென்ற பிரித்தானியாரும், அந்நிய செலவாணியை அள்ளித் தர கடுமையாக உழைத்த அவர்களில் பலரை யாழ்ப்பாணத் தமிழர், சிங்களவர் சகிதமாக இந்தியாவுக்கு விரட்டி, மிச்சம் மீதி இருந்தவருக்கு இழுத்து இழுத்து குடியுரிமைக் கொடுக்காமல் மறுத்து, சொல்ல முடியாத துயரங்களை சந்தித்த ஒரு மாபெரும் கூட்டமே என் கண்கள் முன்னால் விரிந்தன. இவர்களை மதம் மாற்றத் துடித்தவர்கள், அடிமையாக்கியவர்கள் என என்னக் கொடுமைகள்,.

    பரதேசி ( அயலவராக , வடக்கத்தியராக, தோட்டக் காட்டு சக்கிலியராக, ஈனத் தமிழராக ) துன்பட்ட கதைகளின் பிம்பம் தான் இக்கதையோ என்ற எண்ணமும் எனக்குள் எழுந்தது,. படம் பார்த்த பின் மீதியை கூறுகின்றேன்.

    ReplyDelete
  3. //பரதேசி..விமர்சனம் என்று சுருக்கி எழுத முடியாத வாழ்வியல் வரலாறு..வலி,வேதனை,ரணம்,காதல்,காமம் என கரைபுரண்ட காவியத்தை, உருவாக்கியவனை ஓவியமாக்கி மகிழ்வதை தவிர எழுத்தாக்க இயலவில்லை என்னால் ..வாழ்த்துகள் பாலா ..//

    நச் ...! சூப்பர்

    ReplyDelete