Monday, April 22, 2013

வண்ணத்துப்பூச்சிகளை விட்டு விடுங்கள்

 

பிஞ்சுக் குழந்தைக்கு என்னத் தெரியும்
உன் வஞ்சகம் கொண்ட நெஞ்சைப் பற்றி..
மாசில்லா மனமாய்  மடியில் அமரும்
நீ வாங்கித்தரும்
சாக்லேட், பிஸ்கட்டுக்கு முத்தம் பகிரும்
விளையாட்டு காட்டினால்
விண்ணதிர சிரிக்கும், அன்பில் அணைக்கும்.

காமக்கொடூரனே
நஞ்சுள்ளம்  கொண்ட நாயே
நீயென்ன செய்கிறாய்?
அறியாக் குழந்தையை அணைத்து
ஆனந்தம் கொள்கிறாய்
வஞ்சகமில்லாக் குழந்தையை
வன்புணர்வு செய்கிறாய்
வண்ணத்துப்பூச்சியின் சிறகைக்
கொய்கிறாய்

களங்கப்பட்ட பிறப்பே
உன் காமவெறி கட்டுக்கடங்காமல் போனால்
தெருவில் கிடக்கும் நாயைப் புணர்
தறுதலைகளே
எம் தளிர்களை  விட்டு விடுங்கள்..


Widget byLabStrike


8 comments:

  1. இவர்கள் மனிதர்கள் அல்ல... சாக்கடைப் புழுக்கள்...

    ReplyDelete
  2. hey padaipali,

    nijamaagavea un padaipugalil migavum rasithavai idhu...

    oru appavaaga, oru annanaaaga, oru kanavanaaga vaazha koodiya endha oru maanamulla aanmaganum indha maadiri oru Eenas seyallai seyya maattaan...

    ivarkalai thookkil podakoodadhu, anu anuvaaga chitravadai seidhu saaga adikka vendum...

    mazhalaigal - kadavulukku samam enabthu
    kaamuganukku theriyaadhu...

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete