Saturday, April 27, 2013

தெருவோரத்தில் சோசலிசம்


அவை
இவன் வீடு அவன் வீடு என்று
பாராபட்சம் பார்ப்பதில்லை..

எதிரியென்று எவரையும்
நினைப்பதில்லை..

பசியெடுத்தால்
எவர்வீட்டிலும் பசியாறும்..

களைப்பெடுத்தால்
எத்தின்னையிலும் இழைப்பாறும்..

ஒரு வீட்டுக்கு மட்டுமின்றி
ஊருக்கே பொதுவுடமை காவலிருக்கும்..

நிறம்பார்த்து பிரிவதில்லை
கூடிவாழ்ந்து சோசலிசம் கற்றுத்தரும்..

ஊரின் உள்ளே புதுமனிதன்
வந்தாலும்
புது நாய் வந்தாலும்
அவன் யாரென்று விசாரிக்காமல்
அவைகள் விடுவதில்லை..

தெருநாய்கள்
மிகவும் தெளிந்தவை ..


Widget byLabStrike


4 comments:

  1. ஒரு நாள் சாப்பாடு வைத்தால் போதும் .நமக்காக உயிரையும் கொடுக்கும் ஜீவன்கள்..நன்றியின் மறுபெயர்..
    .

    ReplyDelete
  2. வித்தியாசமான சிந்தனை. அருமை நண்பரே

    ReplyDelete