Tuesday, June 11, 2013

மிருக மொழி


மிருகங்களின் மொழி
அலாதியானது
பழகினால் இரண்டு நாட்களில்
அறியலாம்
அதன்
பாசத்தை
கோபத்தை
பசியை
மோகத்தை 
வலியை
காதலை
ஒவ்வொரு மனநிலையிலும்
ஒரு சத்தம் எழுப்பும்
அதன் சமிக்ஞை தெரியும்.
மிருகங்களைப்போல் நல்ல
உறவுகள் கிடைப்பதில்லை!

ஆயிரம் முறை
பழகினாலும் மனித மனத்தை
படிக்க இயல்வதில்லை
உள் ஒன்று புறம் ஒன்று
என வாழும் மனிதரைப்போல
கொடூர மிருகம்
உலகில் எதுவுமில்லை!


Widget byLabStrike


No comments:

Post a Comment