Sunday, June 16, 2013

எந்தைக்கு தந்தையர் தின வாழ்த்துகள் !


கவிதை எழுத எழுத்து பூட்டினாய்
மேகத்தில் ஓவியம் காட்டினாய்
பேச்சினில் வார்த்தை நாட்டினாய்
அறிவுக்கு ஆறு கூட்டினாய்
அன்புக்கு ஆறுமுகமே
எங்கள் குடும்பத்தின் திருமுகமே!

நான் செய்த தவறுகளுக்காய்
நீ அன்று அடித்த போதெல்லாம்
நானறியேன்
என்மேல் படுவது அடியன்று
ஒரு சிற்பியின் உளியென்று!

கற்பாறையாய்  இருந்த என்னை
சிற்பமாய் செதுக்கிய
எந்தையே
தந்தையர் தின நல்வாழ்த்துகள்!!!


Widget byLabStrike


2 comments: