Friday, June 21, 2013

வெற்றி நிச்சயம்



ஆற்றைப் பாருங்கள்
அது
காடுகள்,மேடுகள்
பள்ளங்கள், பாறைகள்
என பயந்து பதுங்குவதில்லை
எதிர் வரும் இன்னல்கண்டு
ஒதுங்கி  நடுங்குவதில்லை
பாய்ந்து ஓடுகிறது
குறுக்கிடுபவைகளை
புரட்டி எடுத்தபடி
காரியத்தில் கண்ணாய்
இருக்கிறது
அதன் நோக்கம்
கடலை அடைவதுதான்!


Widget byLabStrike


1 comment: