Saturday, June 22, 2013

நீயின்றி அமையாது உலகு




விலைகொடுத்து வாங்குவேன் என்று
நான் எள்ளளவும் எண்ணியதில்லை அன்று

காசுகொடுக்காத பொருளாய்  நீமட்டும்தான் இருப்பாய் என்று
கருதியிருந்தேன் அன்று

நீ நினைத்த நேரத்தில் கிடைப்பாய் என்று
மானுட சமுதாயம் உன்னை மதிக்கவில்லை அன்று

இன்று காய்ந்த நிலத்தை கண்டு
நான் கண்ணீர் வடிப்பது உண்டு

நீரின்றி உலகம் நீர்த்து விடுமோ என்று
உலகம் அஞ்சி நடுங்குகிறது இன்று!


Widget byLabStrike


No comments:

Post a Comment