Friday, June 28, 2013

மதம்..வதம்..



யானைக்கு 
பைத்தியம் வந்தால் 
மதம் பிடிக்கிறது
தன்னை வளர்த்தவன் 
தெரிவதில்லை 
போட்டு மிதிக்கிறது !

மனிதனுக்கு 
மதம் என்கிற 
பைத்தியம் பிடிக்கிறது 
தன்னுடன் பழகியவன் 
தெரிவதில்லை 
மானுட சமுதாயம் அழிகிறது !


Widget byLabStrike


1 comment: