Sunday, June 30, 2013

எண்ணத்தில் இருக்கிறது!


கண்ணுக்கு புலப்படாத 
விருட்சம் 
விதைக்குள் புதைந்திருக்கிறது 

அகிலத்தையே அழிக்கும் 
ஆக்கம் 
அணுகுண்டுக்குள் ஒளிந்திருக்கிறது 

ஊருக்கே பாயும் 
நீரோட்டம் 
ஊற்றாய் மண்ணுக்குள் மறைந்திருக்கிறது 

பின்னேறி போய் 
முன்னேறி ஓடிவருதலின் நோக்கம் 
வேகத்தை அகிகரிப்பதற்காய் இருக்கிறது 

பதுங்கும் புலியின் 
நோக்கம் 
பாய்ந்து தாக்கும் லட்சியமாகிறது 

எவனையும் எளிதில் பார்த்து 
எடை போடாதே 
அவன் எவனாவான் என்பது அவன் எண்ணத்தில் இருக்கிறது!


Widget byLabStrike


2 comments: