Tuesday, July 23, 2013

கிறுக்கன்கள்


 புலம்பல்கள் ஒவ்வொருவருக்குள்ளும்
உண்டு..

கூட்டமான பேருந்தில் நின்று பயணிக்கையில்
ட்ராபிக் ஜாமில் வண்டி ஓட்டுகையில்
பணமற்ற பொழுதில்  
காதலை காண சென்று காத்திருப்பு  நீடிக்கையில்
நம்பி இருந்த நண்பன் நம்மை ஏமாற்றுகையில்
பொண்டாட்டியின் பிடுங்கலில்
கணவனின் சந்தேகத்தில்
பிள்ளைகளின் தொந்தரவுகளில்
வாழ்க்கையின் வலி உணர்கையில்
சந்தோசத்தின் உச்சத்தில்
தனிமை சூழும் அனேகநேரங்களில்
வெவ்வேறு சூழலில்..

புலம்பல்கள் ஒவ்வொருவருக்குள்ளும்
உண்டு..

தெருவில் தனியாய் புலம்பிக்கொண்டிருப்பவனை
கிறுக்கன் என்று  தூற்றுகிற மனம்
ஒருபோதும்உணருவதில்லை 
ஒவ்வொருவருக்குள்ளும் கிறுக்கன் இருப்பதை!



Widget byLabStrike


4 comments:

  1. உண்மை உண்மை...

    நமக்குள் உணர்ந்து விட்டால் புலம்பல் நின்று விடும்...!

    ReplyDelete