Friday, July 5, 2013

சாதிவெறி சமூகமே நீ சாதித்தது என்ன ?


சாதி சாதியென்று 
சதிக்குள்ளே மாட்டிக்கொண்ட 
சாக்கடை சமுதாயமே 
சரித்திரத்தில் நீ 
சாவைத்தவிர சாதித்தது என்ன?

கையில் பிடித்துக்கொண்டு 
காம இச்சை தீர்க்க 
விலைமாதுவிடம் போனாயே 
அங்கே நீ 
சாதி பார்த்து படுத்ததுண்டா?

விதைத்தவன் எவன் என்று 
அறியாமல் 
சோறு தின்கிறாயே 
அவன் கீழ்சாதி உளவனென்று 
வாந்தி நீ எடுத்ததுண்டா?

நெய்தவன் சாதி 
என்னவென்று 
அவன் குலம் கோத்திரம் அறிந்துவந்து
எப்போதேனும் 
ஆடை நீ உடுத்தியதுண்டா ?

சாக்கடைக்குள்ளே இறங்கி 
சமூகத்தின் நாற்றம் 
போக்குகிறானே 
அவன் சாதிப் பார்த்து 
இறங்கினால் நாறிப்போவாய் உணர்ந்ததுண்டா ?

இளைய தலைமுறையில் 
ஏனைய இளவரசன்கள் வரலாம் 
இனி வரும் இளவரசன்கள் 
காமத்தில் திளைத்துவிட்டு 
கல்யாணம் வரை போகாமல் 
கழட்டிவிட்டுப் போகலாம் 

சாதிவெறி சமூகமே 
இதைத்தவிர  எதை நீ சாதிக்கப் போகிறாய் !


Widget byLabStrike


4 comments:

  1. இந்தக் கொடுமை மாற வேண்டிய மாற்றம் ஒவ்வொரு மனதிடமிருந்தும் தோன்ற வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் நண்பரே..

      Delete
  2. சாதிவெறி சமூகமே
    இதைத்தவிர எதை நீ சாதிக்கப் போகிறாய் !
    >>
    இன்னும் திவ்யா என்ற நடப்பிணம் இருக்கே
    அதை, வார்த்தை அம்புகளால் குத்தி, குத்தி மீண்டும் சாகடிக்க வேண்டாமா?! அப்படி செய்யாமல் ஓயப்போகுதா நம் சமூகம்

    ReplyDelete