Thursday, August 15, 2013

சுதந்திர தின வாழ்த்து சொல்லும் நிலையில் நானில்லை...


எம் மக்கள்
சாதி, மதம் கடந்து சமத்துவம் காணும்
நாள்வந்தால்
அன்று சொல்கிறேன்
உங்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்து !

அண்டை மாநிலத்தில் இருந்து
எம்மண்ணில் அண்ட வந்த நதி,பொதுவாகி நீரோடு வரும்
நாள் வரட்டும் 
அன்று சொல்கிறேன்
உங்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்து!

மாடியில் கோடியில் வாழ்பவன்
தெருக்கோடியில் பட்டினியில் சாகுபவன் பாகுபாடு இல்லையெனும்
நாள் வரட்டும் 
அன்று சொல்கிறேன்
உங்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்து!

ஊழலில் விளைந்த மண்ணை
உருப்படியாக்கி பண்படுத்தும் ஒருவனை காணும்
நாள் வரட்டும் 
அன்று சொல்கிறேன்
உங்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்து!

எம் மூதாதையன்
ரத்தம் சிந்தி பெற்ற சுதந்திரம், எம் ரத்தம் உரியாத
நாள் வரட்டும் 
அன்று சொல்கிறேன்
உங்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்து!

எம் தமிழ் மீனவன்
இந்திய மீனவன் ஆகும் நாள்
எந்நாளோ
அன்று சொல்கிறேன்
உங்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்து!



Widget byLabStrike


No comments:

Post a Comment