Thursday, September 5, 2013

ஆசிரிய சிற்பிகளுக்கு...

 

 அன்று என்மேல் பிரம்புகளால் ஆன உளிகளின் அடிகள் ஆயிரம் விழுந்திருக்கின்றன..அப்போது நான் அறியவில்லை நாளை சிற்பமாக போகும் ஒரு சிலையைத்தான் அவர்கள் வடிவமைக்க முயல்கிறார்கள் என்று, அறியாமல் திட்டி இருக்கிறேன் அந்த ஆசிரியர்களை..
ஆசிரியர்கள் மாணவப் பருவத்தில் கசப்பானவர்கள், மருந்துகளைப் போன்றவர்கள். மாணவப் பருவத்தை தாண்டிப் பார்க்கும்போதுதான் அந்த மருந்து நம்மை காக்க வல்ல அருமருந்து  என்பதை அறியும் பக்குவம் வருகிறது.
இன்று அந்த சிற்பிகளை எண்ணி பெருமைக் கொள்கிறேன்.
நல்ல சமுதாயத்தை உருவாக்க முனையும் அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் என் ஆசிரியர் தின வாழ்த்துகளும் நன்றிகளும்..


Widget byLabStrike


3 comments:

  1. இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்... தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

    ReplyDelete
  2. ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete