Friday, October 25, 2013

விபத்து



நேற்று என் நண்பர் சாலையில் நடந்த ஒரு விபத்தைப் பற்றி என்னிடம் கூறியதோடு, இதை மறக்காம எழுந்துங்க என்றார்..

அந்த விபத்தைப் பற்றி அவர் விளக்கியபோது நான் அதிர்ந்து விட்டேன்.இரு சக்கர வாகனத்தில் அப்பா,அம்மா, குழந்தை சென்றிருக்கின்றனர்.திடீரென இரு சக்கர வாகனம் ஓட்டிய அப்பா  நிலைத் தடுமாறி விழ, குழந்தை, தாய் மூவரும் விழுந்துவிட்டனர்.அவருக்கு எலும்பு முறிவு ஏற்ப்பட்டிருக்கிறது.

எப்படி விழுந்தார்கள் என்றெண்ணி நண்பர் அவர்களை அணுகி விசாரித்தபோதுதான் தெரிந்திருக்கிறது.

அவர்களுக்கு முன் சென்ற ஆட்டோவில் ஒருவன் புகைப் பிடித்து சென்றிருக்கிறான்.பின்னால் வருபவர்களைப் பற்றி கவலைக்கொள்ளாது  அவன் தட்டிவிட்ட சிகரெட் சாம்பல் பின்வந்த இருசக்கர வாகன ஒட்டுனராகிய அவர்  கண்களில்விழுந்திருக்கிறது.

மிகவும் சாதாரணமாக, அனாவாசியமாக, பொறுப்பற்று ஒருவர் செய்யும் செயல்களால் எவ்வளவு பெரிய விபத்து பாருங்கள்..


Widget byLabStrike


9 comments:

  1. சம்பவம் கொடுமை...

    இன்றைக்கு அதிகமாக பெருகி வரும் நோய் : வாகன விபத்துக்கள்...

    ReplyDelete
  2. சிறிய ஒர் அசட்டையான செயல்
    எத்தனை பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிட்டது
    நல்ல எச்சரிக்கைப் பதிவு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. உண்மைதான் ஐயா...அதிரடியான தண்டனைகளால் மட்டுமே நம் மக்களைத் திருத்த முடியும்...

    ReplyDelete
  4. இப்படியும் இருக்கிறார்கள் மனிதர்கள்....

    ReplyDelete