Tuesday, December 31, 2013

2013 -க்கு நன்றி, 2014 -க்கு வணக்கம்



ஆண்டொன்று முடிவதும், ஆண்டொன்று பிறப்பதும் நம் வாழ்வில் ஏற்படும் நிதர்சனம் என்றாலும், ஒவ்வொரு ஆண்டும் மனிதனின் வாழ்வில் ஏதேனும் ஒரு விதத்தில் முக்கியமாகிப் போகிறது..

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வித அனுபவத்தை, பரவசத்தை, மகிழ்ச்சியை, புதிய நட்பு, காதல், உறவு, பிரிவு என மனிதன் ஏதேனும் ஒன்றை  நமக்கு கொடுத்து  கொண்டுதான்  இருக்கிறது. அப்படி ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதத்தில் மறக்க முடியாத ஆண்டாகவே ஆகிப் போகிறது.முடிந்த ஆண்டுகள் திரும்பி வரப்போவதில்லை..

ஆண்டு ஒவ்வொன்றும் மாற மாற  நாம் தோல் சுருங்கி மூப்பாகி கொண்டிருக்கிறோம், இருந்தும் மனிதனின் மனங்களில் வாழும் பொறாமை, சண்டை ,சச்சரவு , சாதி மதவெறி, நிறவேற்றுமை, உயர்வு தாழ்வு  போன்ற கெட்ட விஷயங்கள் சுருங்க ஆரம்பிப்பதே இல்லை, மாறாக விரிந்து படர்ந்து வளரவே  ஆரம்பிக்கிறது.அதுவே மனித இனத்தின், மனத்தின்  மாபெரும் எதிரியாகிப் போகிறது. வாழும் வாழ்க்கையையும், வளரும் சமூகத்தின் நலனையும் எண்ணிப் பார்த்து இனிவரும் நாட்களிலாவது  இதையெல்லாம் விட்டு வெளி வர வேண்டும்.

அடுத்து உறவு, காதல், நட்புகளின் பிரிவுகளில் முக்கியமான பிரச்சினையாக இருப்பது "ஈகோ" நீயா? நானா? போட்டி..ஈ கோவை கோ கோ என அனுப்பிவிட்டு வரும் ஆண்டை இன்முகத்தோடு வரவேற்று உறவை பேணிக்காப்போம்  வாருங்கள்..
எப்போதும் போல்தான் இந்தநாளும் என்றாலும், ஆண்டின் முடிவை பழைய மறக்க வேண்டிய நினைவுகளின் முடிவாகவும், ஆண்டின் தொடக்கத்தை நல்லதொரு எதிர்காலத்தின் தொடக்கமாகவும் பார்ப்பதில்தான் வாழ்க்கையின் சுவாரஸ்யம் அடங்கி இருக்கிறது..இன்றோடு முடியும் 2013ஐ நன்றி கூறி அனுப்பி வைத்து, மக்கள் வாழ்க்கை வறுமை ஒழிந்து, பசி எனும் பிணி நீங்க வரட்டும் என 2014  வணக்கம் கூறி வரவேற்போம்..


Widget byLabStrike


2 comments:

  1. மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..!

    ReplyDelete
  2. வரும் 2014 ஆண்டில் மேலும் சிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete