Tuesday, December 3, 2013

கொடுப்பதற்கு இல்லை முத்தங்கள்!



போகும் வழியில் 
காணும் குழந்தைகளை கிள்ளி 
முத்தம் பல இடுகிறேன் ! 
குட்டிகளாய் இருக்கும் 
மிருகக் குழந்தைகளை அள்ளி 
முத்தமாரிப் பொழிகிறேன் !
காகிதங்களுக்கும், கடிதங்களுக்கும் கூட 
என் முத்தங்களை 
மொத்தமாய் பரிசளிக்கிறேன்!
ஏமாற்றுகாரி உனக்கிட
நான் மிச்சம்  வைக்கவில்லை
முத்தங்களை!


Widget byLabStrike


No comments:

Post a Comment