Tuesday, December 31, 2013

"இயற்கை" இயற்கை எய்தியது


எம் மண்ணின் இயற்கையை காக்கவும் 
மண்ணை பொன்னென ஆக்கவும் 
உறுதி பூண்டு 
இயற்கை உரம் போட்டு 
மண்ணை நல் உரமாக்குவது என 
நெஞ்சில் உரம் கொண்டு 
உறுதியோடு வாழ்ந்த
உரத்த சிந்தனையாளன்
எம் இயற்கை விஞ்ஞானி
மறைந்து விட்டான்..
அவனால்தான் இம்மண்ணில்
கொஞ்சமாவது
ஆக்ஸிஜன் உயிர்வாழ்ந்து
கொண்டிருந்தது..
கார்பன் இனி எம் கண்களை மறைக்க கூடும்..

நீ இல்லாது
தண்ணீர் இல்லாத உலகத்தில்
கண்ணீரோடு எம் சந்ததி வாழுமோ
என கவலை வருகிறது அய்யா..ஆழ்ந்த அனுதாபங்கள் 


Widget byLabStrike


2 comments:

  1. அன்புடையீர்.
    தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு,பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete