Thursday, December 19, 2013

"hush girls don't scream" - உணர்வுகளில் ஊடுருவிய உலக சினிமா



பொதுவாக உலக சினிமா ரசிகர்களின் ஏகோபித்த விருப்பத்தில் முதலிடம் பெறுவது என்றால் அது அக்காலம் முதல் இக்காலம் வரை இரானிய திரைப்படங்கள் தான்..வாழ்வியலை, எதார்த்தத்தை, கவர்ச்சி விரசமற்ற கதை காவியத்தை அவர்கள் கையாளும் விதமே தனி சுவை.நெருடல் இல்லாது பயணிக்கின்ற பாணி அவர்களுக்கு பரிச்சயமானது.வாழ்வோடு ஒத்துப் போகிற காட்சியமைப்பு அவர்களுக்கு எளிதில் கை கூடி வருகிறது. ஒவ்வொரு உலக சினிமா விழாக்களிலும் வெவ்வேறு நாட்டுப் படங்களை பார்த்த போதும் ஏனோ இரானிய சினிமா தருகின்ற தாக்கம் மற்றவற்றில் கிடைப்பதில்லை. இரானிய சினிமா காணாது விட்டோமானால் உலக சினிமா பார்த்த திருப்தியும் பலருக்கு ஏற்ப்படுவதில்லை..

இந்த ஆண்டும் அப்படித்தான்.. சென்னை உலக திரைப்பட திருவிழாவை உன்னத மாக்கியது ஒரு படம்"hush girls don't scream" படத்தைப் பார்த்துவிட்ட தாக்கத்தில் இருந்து இன்னும் நான் மீள வில்லை.கதை,காட்சி,பாத்திரம் என எல்லாமும் சேர்ந்து என் இதயத்தில் புகுந்து உடம்பின் எல்லா பகுதியையும் குடைந்து கொண்டிருக்கிறது. பல காட்சிகளில் என்னையும் அறியாமல் என் கண்களில் நீர்.

ஆரம்பக் காட்சியே மணப்பெண் உடையில் ரத்த கறை படிந்த காட்சியோடு படம் துவங்குகிறது.காட்சி விரியும் போது சிறுவயதில் தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவை மணப்பெண் விவரிக்கிறாள், அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் அவளுக்கு அதே போன்று ஒரு சிறுமிக்கு இழைக்கப்படும் பாலியல் தொந்தரவை காண நேர்கிறது, சிறுமியை காப்பாற்றி குழந்தையை பாலியல் தொந்தரவு செய்தவனை கொலை செய்கிறாள். கொலையாளியாக சிறை செல்கிறாள்,சட்டத்தில் முன்னால் குற்றவாளியாக நிற்கிறாள் யாருக்காக கொலை செய்தாலோ அந்த சிறுமி குடும்பம் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் தன குழந்தை வாழ்வு பாதிக்கப்படும் என அஞ்சுகிறது, அவளுக்காக குரல் கொடுக்க மறுக்கிறது..இதனால் பாதிக்கப்பட்ட அவள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பினாளா இல்லை தண்டிக்கப்படாளா என்பதே முடிவு..

"உஷ்"- ஹைக்கூ போன்று அருமையான தலைப்பு, தலைப்புக்கு பின்னால் காவியத்தின் அமைப்பு.தலைப்புக்கு ஏற்ப கதை இவ்வளவு நேர்த்தியாக பயணிப்பதை எண்ணி சிலாகிக்க வேண்டி இருக்கிறது.பெண்களின் மீது கட்டவிழ்கப்படுகிற அடிமைத்தனம், ஆதிக்க சிந்தனை, பாலியல் தொந்தரவு   "உஷ்" என்று எங்கெல்லாம் சமூகம் உச்சரித்து பயமுறுத்துகிறதோ அந்த அனைத்துப் பகுதியையும் பேசியது படம். 

இந்த ஆண்டு உலக சினிமா திருவிழாவில் ஒரு முழுமையான படம் பார்த்த திருப்தியை இப்படம் அளிக்கிறது..



Widget byLabStrike


2 comments:

  1. விமர்சனம் படத்தை பார்க்க வேண்டும் எனும் ஆவலைத் தூண்டுகிறது... நன்றி...

    ReplyDelete
  2. வலைப்பதிவுகளைப் படித்து, நீண்ட நாட்கள் ஆகின்றன நண்பரே. முகநூல் முடங்கிக் கிடந்தவனை இப்படம் பற்றி தாங்கள் கொடுத்திருந்த நிலைத்தகவல் இங்கு அழைத்து வந்திருக்கிறது.

    தமிழ்த் திரையுலகம் மறந்துபோன எதார்த்தை இரானிய திரைப்படங்கள் கொடுத்து இளைப்பாற்றுகின்றன என்றால் நிச்சயமாக கண்டு ரசிக்க வேண்டியதுதான். தொடர்ந்து தாங்கள் கண்டு மகிழந்த (நெகிழ்ந்த) திரைப்படங்களை எங்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். நன்றி.

    ReplyDelete