Thursday, January 30, 2014

நிர்வாணத்தை பரப்புகிறேன் !


நிர்வாணத்தை ரசிக்கிறேன் 

அவை எந்த கபடமுமற்ற 

புறவெளியை காட்டுகின்றன ! 


நிர்வாணத்தை ஆராதிக்கிறேன் 

அவை அகமொன்று மறைத்து 

புறமொன்று பேசுவதில்லை ! 


நிர்வாணத்தை அனுபவிக்கிறேன் 

அவை மட்டுமே அலாதியான மகிழ்ச்சியை 

அடுக்கடுக்காய் தருகின்றன ! 


நிர்வாணத்தை எனதாக்குகிறேன் 

அவை சாதி மத இனமற்ற உலகை 

எனக்குள் நிரப்புகின்றன !


நிர்வாணத்தை பரப்புகிறேன் 

அவை தெளிந்த நீராய் 

முரனற்ற உலகைக் காட்டுகின்றன !



Widget byLabStrike


1 comment:

  1. // அவை சாதி மத இனமற்ற உலகை எனக்குள் நிரப்புகின்றன ! //

    உண்மை...

    ReplyDelete