Friday, January 31, 2014

கேப்டன் பிலிப்ஸ் - ஆறு பிரிவில் ஆஸ்கர் பரிசீலனை படம்



இது ஆஸ்கர் மாதம் 
இன்று..

Captain Phillips - கேப்டன் பிலிப்ஸ் 
 
உண்மையில் நடந்த கதைகள் அதன் எதார்த்தம் மாறாமல் படமாக்கப்படும் போது அவை எப்போதும்  சினிமா விரும்பிகளின் ரசிகர்களின் ஏகோபித்த ரசனையையும், பாராட்டையும் பெறுவது இயல்பு. அந்த வரிசையில் தற்போது வந்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கும் படம்தான் கேப்டன் பிலிப்ஸ்..

கேப்டன் பிலிப்ஸ் தலைமையில் புறப்படும் சரக்கு கப்பலை சோமாலிய கடற் கொள்ளையர்கள் கைப்பற்றுகிறார்கள். பிணைக்கைதியாக கேப்டன் பிலிப்ஸ் ஐ பிடித்து பேரம் பேசுகிறார்கள். அவர்கள் பேசும் வசனங்களில்  கொள்ளையர்கள் பக்க எதார்தத்தையும் நியாயத்தையும் கூட மிக இயல்பாக பேசுகிறது படம். கொள்ளையர்கள் சிறிய படகில் வந்து பெரிய கப்பலை கைப்பற்றும் விதம், கடலலையின் ஆக்ரோசம், கப்பலின் வளைவு நெளிவு என இசையும் கேமிராவும் போட்டிபோட்டு விளையாடுகின்றன..

டாம் ஆங்கஸ் நடிப்பை சொல்லவா வேண்டும், மனுஷன் கேப்டனாகவே வாழ்ந்திருக்கிறார்..திரைக்கதை அமைப்பு , காட்சி, கேப்டனோடு சேர்ந்து பதற்றம் நம்மையும் பற்றிக்கொள்கிறது. அமெரிக்க ராணுவத்துக்கு தெரிவிக்கப்படும் செய்தி அறிந்து வரும் அவர்கள் கேப்டனை காபாற்றினார்களா?? கப்பல் விடுவிக்கப்பட்டதா?  என்பதை சீட்டின் நுனியில் அமரவைத்து பார்க்கவைத்த பரபரப்பான படம்..

ஆஸ்கார் பரிசீலனையில் உள்ள படங்கள் என்றாலே எல்லோருக்கும் ஒரு எதிர்பார்ப்பு உண்டு..அதிலும் சிறந்த படம், சிறந்த துணை நடிகர், எடிட்டிங், சவுண்ட் எடிட்டிங், சவுண்ட் மிக்சிங், தழுவல் திரைக்கதை என ஆறு பிரிவுகளில் போட்டி போடுகிற படம் என்றால் சொல்லவா வேண்டும்..

ஆஸ்கரை வெல்ல வாழ்த்துக்கள்...




Widget byLabStrike


6 comments:

  1. உடனே பார்க்கத் தூண்டும் விமர்சனம்... நன்றி...

    ReplyDelete
  2. போன வாரம் தான் பார்த்தேன். அந்த கொள்ளையர்களை பார்த்தாலே பாவமாய் இருக்கு. சாப்பிட்டே பல நாள் ஆன மாதிரி இருப்பாங்க. நிஜத்தில் அந்த கேப்டன் தைரியமில்லதவர்னு படித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா...பார்க்க பாவமாய் இருந்தாலும் இயல்பில் மிரட்டி இருப்பார்கள்..மனவலிமைதானே தைரியம் தருகிறது..நன்றி..

      Delete
  3. உண்மைக் கதைகளை மேற்குலகினரால் திரைக்குக் கொண்டுவந்தால், நான் பார்க்கத் தவறுவதேயில்லை.
    உங்கள் விமர்சனம் அருமை, மிக நன்கு ரசித்துள்ளீர்கள்.ஆஸ்கார் கிடைக்க வேண்டும்.
    Tom HANKS பிறவிக் கலைஞன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் உண்மை..மிக்க நன்றி..

      Delete