Saturday, February 1, 2014

கிராவிட்டி - பத்து பிரிவில் ஆஸ்கர் பரிசீலனை படம்

  


இது ஆஸ்கர் மாதம் 
இன்று..

Gravity - கிராவிட்டி

ஒரு தனி ஆளாக அடர்ந்த காட்டுக்கு மாட்டிக்கொண்டால், தனி ஆளாக யாருமற்ற இடத்தில் இரவில் மாட்டிக்கொண்டால், தனி ஆளாக ஒரு தீவில் மாட்டிக்கொண்டால் இப்படி தனி ஆளாக மாட்டிக்கொள்ளும் இடங்கள் என்பது ஒரு பதட்டதையும், பயத்தையும், உயிர் பிழைப்பதற்கான தேடுதலையும் தேவையையும்  உண்டு செய்யும்..
நாம் மேற்சொன்ன இடங்கள் எல்லாமே இந்த பூமியில் தனி ஆளாக மாட்டிக்கொண்டால்.. அதே விண்வெளியில் யாருமற்ற  தனிமையில் ஒரு பெண் மாட்டிக்கொண்டால்..கற்பனை செய்து பாருங்கள்..கற்பனையே ஒரு பயத்தையும் பதட்டதையும் உண்டு செய்கிறது அல்லவா??

ஆம் அப்படி விண்வெளியில் தனிஆளாக மாட்டிக்கொண்டு உயிர்வாழ்வதற்கான, பிழைப்பதற்கான வழிகளை தேடும் ஒரு பெண்ணின் சர்வைவல் பிரச்சினைதான்  கிராவிட்டி..

விண்கலத்தை பழுதுபார்க்க அனுப்பட்ட விஞ்ஞானிகள் குழு பழுது பார்த்துக் கொண்டிருக்கும்போதே விண்கலம்  விபத்துக்குள்ளாகிறது..விபத்தின் பிடியில் விஞ்ஞானிகள் பலரும்  இறந்து போக ஒரு ஆண்  விஞ்ஞானியும், ஒரு பெண் விஞ்ஞானி மட்டுமே உயிர் பிழைக்கிறார்கள்..அவர்களின் உயிரும் அந்தரத்தில் ஜீரோ டிகிரி கிராவிட்டியில் ஊசல் ஆடிக்கொண்டிருக்கிறது..

ஒருவர்தான் உயிர் பிழைக்க கூடும் என்கிற நிலையில், அந்த பெண் விஞ்ஞானியை தற்காலிகமாக காப்பாற்றி விட்டு அவள் பிழைப்பதற்கான சில சாத்தியக்கூறுகளை சொல்லிவிட்டு அந்த ஆண் விஞ்ஞானியும் கீழே விழுந்து உயிர் துறக்கிறார்..

அவர் சொன்னபடி பூமியை தொடர்பு கொள்வதற்காக அருகில் உள்ள சீன விண்கலத்தை அடைந்து அதன்மூலம் பூமிக்கு செய்தி அனுப்ப அவள்படும்பாடு, அதனை அடைந்து பூமியை தொடர்பு கொள்வதற்குள் அவள் படும்பாடு பயம், பதற்றம், பாசம், காதல், உறவு, உணர்வு, மரணபயம் என எல்லா உணர்வுகளையும் சொல்கிறது படம். காதாநாயகி நடிகை சாண்ட்ரா புல்லக் உயிர் தப்பினாரா, பூமியை தொடர்பு கொண்டாரா, பூமிக்கு திரும்பினாரா இல்லையா என்பதுதான் கிளைமாக்ஸ்.. சாண்ட்ரா புல்லக் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்..

காட்சிகள் விறுவிறுப்பின் உச்சம், காமிரா ஒரு விஞ்ஞானி ஆகி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்..அவ்வளவு ஆராய்ச்சிகளை அது செய்து முடிக்கிறது..கலை இயக்கம், கிராபிக்ஸ், விசுவல் எபெக்ட்ஸ் சொல்லவே வேண்டியதில்லை கற்பனையின் எதார்த்தத்தின் உச்சம்..இசை இயல்போடு சேர்ந்து பயணிக்கிறது.. மொத்தத்தில் விண்வெளியில் நாமும் மாட்டிக்கொண்டு மிதக்கும் உணர்வு..அருமையான படம் என்பதை விட போராட்டமான   விண்வெளி வாழ்க்கை..

சிறந்த படம், சிறந்த நடிகை, சினிமாட்டோக்ராபி , இயக்கம், எடிட்டிங், இசை, கலை இயக்கம், சவுண்ட் எடிட்டிங், சவுண்ட் மிக்ஸிங்,   விசுவல் எபெக்ட்ஸ் என பத்து பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டிருக்கிற படம்..

ஆஸ்கரை வெல்ல வாழ்த்துகள்..


Widget byLabStrike


6 comments:

  1. என்னவொரு வித்தியாசமான கற்பனை...!

    நன்றி...

    ReplyDelete
  2. புதிய முயற்சிகளுக்கு எப்போதும் அங்கீகாரம் உண்டு...படக்குழுவுக்கு வாழ்த்துக்களை வழங்குவோம்..

    ReplyDelete
  3. நல்ல பதிவு... அருமை

    ReplyDelete
  4. நல்ல பதிவு... அருமை

    ReplyDelete