Friday, February 14, 2014

கடந்தகால காதலிகளுக்கும், நிகழ்கால காதலுக்கும்..



இலக்கிய காதல் கண்டு 
நான் இறுமாப்பில் மிதந்த துண்டு
காலம் வென்று காதல் வந்தது
காவியக் காதல் என்னை வென்றது!

ஒற்றைச்சொல் மந்திரமாய்
ஒருத்தி வந்தாள்
அவள் ஈராண்டு காலமாய்
என்னை வென்றாள்!

காதல் மொழி பேசி அவள்
என் காலத்தை கடத்தியவள்
ஓராண்டு ஈராண்டு
அவளோடு வாழ்ந்துவிட்டேன்  பல நூறாண்டு!

அடுத்தவன் மனைவி
அவள் இன்று
காதல் வாழும்
நினைவில் என்றும்!

கடந்தகால காதலிகளுக்கும், நிகழ்கால காதலுக்கும் இக்கவிதை சமர்ப்பனம்..
காதலர் தின வாழ்த்துகள்..


Widget byLabStrike


1 comment:

  1. அருமை...

    அன்பு தினம் - என்றும் வேண்டும்...
    தினம் என்றும் - அன்பாக வேண்டும்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete