Tuesday, February 25, 2014

கன்னிப்பொறி !



கண்கள் உருத்துகிறதென்று
மருத்துவரிடம் சென்றேன்
என்ன தொழில் என்றார்?
கணிப்பொறி (வரை)கலைஞன் என்றேன்.

கவலையுறாதீர்..
இமைக்காமல்
கணினியைப்  பார்ப்பீர்கள்
கண்ணில் நீர் வற்றும்
ஆதலால் வரும்
பிரச்சினை இது என்றார்..

அவருக்குத் தெரிந்திருக்கவில்லை
பெண்ணே உன்னைப் பார்க்கும் போதும்
நான் இமைப்பதில்லை என்று!
கணிப்பொறி மட்டுமல்ல
கன்னிப்பொறியும் பிரச்சினைக்கு காரணமென்று ! 


Widget byLabStrike


1 comment:

  1. அதானே...? அவருக்கு எப்படி உண்மை தெரியும்...!

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete