Thursday, July 10, 2014

நினைவுகள் - கம்மஞ்சோறு


பல ஆண்டுகள் ஆகிவிட்டது பார்த்தே..கூல் விற்கிற இடமெங்கும் கேட்பேன் கம்மங்கூழா என்று.. இல்லை கேழ்வரகு என்பார்கள்.. 
கம்மஞ்சோறு..என் தாத்தா விரும்பி சாப்பிடுவார், உடம்புக்கு நல்லது என சாப்பிட சொல்லி என்னை வற்புறுத்துவார் ..
அன்றைய காலக்கட்டத்தில் அது ஏழை உணவு.. ஆனால் இன்றோ ஆர்கானிக் கடையில் வாங்கி சாப்பிடும் காஸ்ட்லி ஃபுட்..
கிராமத்தில் கூட இப்போ கம்பு இல்லை..கம்மஞ்சோறும், முருங்கை கூட்டும் நினைத்தாலே எச்சில் ஊறுகிறது..
இன்னும் நினைவிருக்கிறது மிகவும் செலவு குறைவான பயிர்..ஒரு சின்ன தூறல் விழுந்தால் போதும் விதைத்து விடுவார்கள்..அதுவாய் வளர்ந்து செழிக்கும்.. கிளிகள்  கூட்டம் கூட்டமாய் கம்பை அழகாக கடித்து எடுத்துக்கொண்டு பொய் கடிக்கும்.. கம்மங்காடு முழுக்க குருவி சத்தம் இனிக்கும்.. ஒரு சில்வர் பாத்திரத்தைக் கொண்டு நாங்கள் தட்டை தட்டிக் கொண்டு குருவி ஓட்டுவோம்..மலரும் நின் ஆய்வுகள் அவை..
ஆர்கானிக் கடையில் வாங்கிய கம்பு காலை உண்டு வந்தேன்..
கம்பு செம தெம்புதான்யா..


Widget byLabStrike


1 comment:

  1. எங்க வீட்டில் எல்லா வருட ஏப்ரல், மே, ஜீன் மாதங்களில் கம்மங்கூழ் செய்து வருகிறோம் அதன் வாசனைக்கும் எதுவுமே ஈடு கொடுக்க முடியாது

    ReplyDelete