Thursday, January 22, 2015

திருநங்கை என திருத்தப்பட்ட போதும் !



பொட்டை என்றீர்
பொறுத்தருள்ந்தோம்
ஒன்பது என்றீர்
ஒதுங்கி நின்றோம்
அரவாணி என்றீர்
அமைதி காத்தோம்
உஸ் என்றீர்
ஊமையென இருந்தோம்
நாகரிகம் காப்பதாய்
ட்ரானி என்கிறீர்
வார்த்தையால் ஒவ்வொரு நாளும்
வசைபாடுகின்றீர்!

திருநங்கை என எங்கள் பெயர்
திருத்தப்பட்டபோதும்
எவரும் அப்படி
திருவாய் மலர்வதில்லை!

ஆணாய் நின்று காப்பதும்
பெண்ணாய் மாறி அரவணைப்பதும்
நாங்கள் என்றபோதும்
சமூகத்தில் எம்மை எச்சங்கள் ஆக்கினீர்!

புறக்கணிப்பின் வலிமறந்து
புன்முறுவல் பூக்கிறோம்
புணர்ச்சிக்கு மட்டும் எம்மை
போர்த்திக்கொள்ள நினைக்கிறீர்!

நானாய் மாறவில்லை
தானாய் மாறிய உடற்கூறு
தண்டனை மட்டும் எங்களுக்கு!

ஆணுக்கும் பொண்ணுக்கும்
நடுவே நாங்கள்!
சமூக அங்கிகாரம் 
எமக்கும் தாங்கள்!

(சமூகம் தங்கள் "ஐ" யை திறக்க வேண்டிய
நேரமிது..குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்ட அவர்களை நீங்கள் அரவணைக்க வேண்டாம் அட்லீஸ்ட் புண்படுத்தாதீர்கள்..)



Widget byLabStrike


No comments:

Post a Comment