Saturday, January 31, 2015

காந்தி கணக்கு


உன் நெற்றியை
பற்றியபோது
நிலவைத்தொட்ட ஆம்ஸ்ட்ராங் நினைப்பு!
உன் கூந்தலை
வருடியபோது
கிளைப் பரப்பிய டாலியின் மீசை!
உன் செவிமடல்
கடித்தபோது
சினுங்கலில் பீத்தோவன் இசை !
உன் இதழ் பரப்பில்
இறங்கிய போது
உதட்டு மடிப்பில் ஷெல்லியின் வரி!
உன் முத்தத்தில்
மூழ்கியதில்
கண்மூடிய புத்தனின் தியானம்!
உன் உடல்மொழி
பரிணாமத்தில்
ஷேக்ஸ்பியரின் நாடக அரங்கேற்றம் !
உன் உடலெங்கும்
என் தடம் பதிப்பதில்
ஹிட்லரின் ஆதிக்க வெறி!
யுத்த உச்சம்
அடிக்கு அடி
காந்திய அகிம்சை காந்தி கணக்கில்...!


Widget byLabStrike


1 comment: