Thursday, February 5, 2015

புரிதலில் மாறுதல் வேண்டும் !



அவர்கள் பயணிக்கும் அதே புறநகர் ரயிலில்தான் இவளது பயணமும்..இருவருக்குமான வாழ்வாதாரப் போராட்டம் மட்டும் வேறு வேறு.. 
இவளுக்கு எப்போதுமே அவர்கள் மீதான வெறுப்பு உண்டு. எப்போதும் அவர்கள் ரயிலில் மிரட்டி பிச்சை எடுப்பதாகவும், "ஐ" படத்தின் பிரச்சினையின் போது கூட 
, அப்படி என்ன பண்ணிட்டாங்கன்னு இவங்க போராட்டம் பண்றாங்கன்னு என்னிடம் எரிச்சலை வெளிப்படுத்தியிருக்கிறாள்..

நான் , புறக்கணிக்கப்பட்ட அவர்களின் வலி அறிந்தால், நீ அப்படி பேசமாட்டாய் என மறுதலித்திருக்கிறேன்..
இருந்தும் என் கருத்தை ஏற்றுக்கொண்டவளாய் அவள் எப்போதும் நடந்து கொண்டதில்லை..

நேற்று அவளே வந்து உன் கருத்தை ஏற்கிறேன்டா..அவர்களுக்கு உள்ள தாய்மை உணர்வு பெண்களிடத்திலும் இல்லை என்றபோது ஆச்சர்யப் பட்டுவிட்டேன்..உனக்குள் எப்படி இப்படி ஒரு மாற்றமென்று!

நடந்ததை சொன்னாள் ..
வழக்கம்போலே அன்று அவள் ரயிலில் பயணித்தபோது ஒரு திருநங்கை பணம் கேட்டு ஒரு பெண்ணிடம் கை ஏந்தியதாகவும், அந்தப்பெண் அக்கா என்னிடம் பத்து ரூபாய்தான் இருக்கு, ரயில் இறங்கி வீட்டுக்கு பஸ்ல போக 7 ரூபாய் வேண்டும் 3 ரூபாய் எடுத்துட்டு ரூ 7 தாங்க, என்று நீட்டியபோது அந்த திருநங்கை அதை வேண்டாமென்று மறுத்துவிட்டு தன்னிடத்தில் வைத்திருந்த 10 ரூபாயை அந்தப் பெண்ணிடத்தில் கொடுத்து, இரவு நேரத்தில் போற, இத வச்சிக்கோம்மா, பஸ் கிடைக்கலன்னா என்னப்பண்ணுவ..ராத்திரி நேரத்துல போகும்போது எக்ஸ்ட்ரா கைல காசு வச்சிக்கனும், நானும் உனக்கு அக்காதான் வாங்கிக்கோ, என்றபோது கண் கலங்கி விட்டாளாம் அந்தப் பெண்ணோடு சேர்ந்து இவளும்..

புரிதலில் மாறுதல் வருகிறபோது எல்லோரும் சமமாவோம்!


Widget byLabStrike


No comments:

Post a Comment