Friday, February 13, 2015

நான் சுத்தனில்லை !



இரவானதும் 
ஏதோ வந்து தொலைக்கிறது 
எனக்கு !
மெலிதான இரவு விளக்கை விட
உன்னை மெருகேத்திக் காட்ட 

எதாலும் இயலாது!
கவிதைப் புனைய வேண்டிய கட்டாயமும்,
உன்னைக் கட்டிப் புனைய கட்டாயமும் 

என்னை வந்து சேருகிறது !
நிலவுக்கும் உனக்குமான 

அழகிப் போட்டியில்
நீயே "மிஸ் ப்ரைட் " பட்டம் வெல்கிறாய்!
நிலாச்சோறு திண்ண 

நான் ஆசை கொண்டதேயில்லை..
நீ அருகாமை இருக்க, 

உன்னை திண்ணாமல் விட்டுவிட 
புத்தனில்லை 
நான் அவ்வளவு சுத்தனில்லை!


Widget byLabStrike


No comments:

Post a Comment