Tuesday, May 26, 2015

என்னில் பாதி ஆனவளுக்கு...



நான் வாழ நினைத்த
வாழ்க்கையெல்லாம்
கண்ணும், காதும் வைத்து
காதல், காமம் என பெயரும் வைத்து
கற்பனை சிறகு பூட்டி
இங்கே
கிறுக்கி வைத்துள்ளேன்..

அது
நான் வாழ்ந்து முடித்த
வாழ்க்கையோ என்று
கண்ணும் மூக்கும் வைத்து
கற்பனை தேரில் ஏறி
கிறுக்கி நீ
வருத்தம் கலந்து உலா வருகிறாய்!



Widget byLabStrike


1 comment: